பாடநெறி விபரங்கள்

தன்னியக்க மின்சாரவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: E3 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

GCE (O/L) சித்தியடைந்திருத்தலுடன் 16 வயதிற்கு மேற்பட்டவராயிருத்தல் வேண்டும் அல்லது WP1 கற்கைநெறியினை திருப்திகரமாக பூர்த்தி செய்திருத்தல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில் செய்பவராயிருத்தல் வேண்டும்.

மீள்பார்வை

தன்னியக்க இயந்திர மின்சாரவியல் தொழில்நுட்பத்தில் செயல்முறை மற்றும் தத்துவவியல் அறிவினை பெற்றுக்கொள்ளுதல். அளத்தல் கருவிகளின் உபயோகம் மற்றும் பழுதுபார்த்தல் உட்பட மின்சார அலகுகள் உபஅலகுகள் பற்றிய விளக்கத்தினை பெற்றுக்கொள்ளுதல்.

குறிக்கோள்

கனரக, பாரமற்ற வாகனங்களின் மின்தொகுதிகளை பராமரித்தலுக்கான செயல்முறை அனுபவத்ததை அடைவதன்மூலம் சுயதொழிலினை ஆரம்பித்தல் அல்லது தங்களது வேலையிடத்தின் தரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்காக வேலையின் தரம் ஆகிவற்றை உயர்த்துதல்.

உள்ளடக்கம்
  • மின்சாரவியலின் அடிப்படை
  • சுற்றுக்களும் அதன் பிழைதிருத்தங்களும்
  • மின்காந்தவியல்
  • எரிவூட்டல் தொகுதி
  • செருகிகள்
  • மின்கலங்கள்
  • தைனமோக்கள்
  • தொடக்கி மோட்டார்கள்
  • ரெகுலேட்டர்களும் கட்அவுட்டுகளும்
  • வாகனங்களிலும் மற்றைய உபசாதனங்களிலுமுள்ள பிரதான சுற்றுக்கள்
கட்டணம் ரூ. 10,500
பின்னால்