பாடநெறி விபரங்கள்

ஆயுத இயந்திரவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: T1 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 9 சித்தியடைந்திருத்தலுடன் WP1 கற்கைநெறியினை பூர்த்திசெய்திருத்தல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில்புரிதல்.

மீள்பார்வை

கடைச்சல் இயந்திரமும் அதனோடிணைந்த துளையிடல், தட்டையாக்கல், கிரைண்டிங்கு மற்றும் நிலைக்குத்து இயந்திரங்களின் தத்துவவியல், செய்முறை ஆகியவற்றில் மாணவனிற்கு முறையான அறிவினை பெற்றுக்கொள்ள முடிகிண்றது. மேலதிகமாக மூலப்பொருட்களும் பொறியியல்துறையில் அதன் உபயோகங்களும் பற்றிய பயிற்சி வழங்கப்படுகிண்றது.

குறிக்கோள்

உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கும் சுயதொழில் செய்வதற்கான தன்னம்பிக்கையினை ஏற்படுத்துவதற்காகவும், தொழிற் தகைமையுடன் ஆற்றல்மிக்க திறமையான கைவினைஞர்களை உருவாக்குதல்.

உள்ளடக்கம்
  • வேலைத்தள பாதுகாப்பு
  • கடைச்சல் இயந்திரம், அளத்தல் கருவிகள் பற்றிய அறிமுகம்
  • முகப்பு மற்றும் நீள் கடைச்சல்
  • கூம்புக்கடைச்சல்
  • புரி வெட்டுதல்
  • கைபிடி கடைச்சல்
  • பல்வேறுவகை பிடித்தல் முறைகள்
  • குறியிடலும் கையாயுதங்களை இயக்குதலும்
  • துவாரமிடல், துளையிடல், அகழ்ச்சியாக்கல்
  • ஆயுதம் சாணைபிடித்தலும், மீழ் கூராக்கலும்
  • துவாரமிடல் இயந்திரம், உருவமைத்தல் இயந்திரம் ஆகியவற்றின் அறிமுகம்.
கட்டணம் ரூ. 15,000
பின்னால்