முழுநேர கற்கைநெறி

மாணவர்களை இணைத்துக்கொள்ளும் முறைமை
  • க.பொ.த(சா/த) பரீட்சை ​பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டதும் வருடாந்தம் முழுநேர பயிற்சிநெறிக்காக மாணவர்களை சேர்த்துக்கொள்ளுதல் அரச வர்த்தமானி மூலமும் செய்திப்பத்திரிகைகளிலும் சித்திரை/வைகாசி மாதத்தில் பகிரங்கப்படுத்தப்படும்.
  • மாதிரி விண்ணப்பப்படிவத்தின்படி விண்ணப்பங்களை
    முகாமையாளர் – மனிதவளமும் நிர்வாகமும்,
    இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம்,
    582. காலி வீதி,
    கல்கிசை.
    என்னும் முகவரிக்கு முடிவுத்திகதிக்கு முன்பதாக பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும்.
  • எழுத்துமூல பரீட்சை, செயல்முறை பரீட்சை, நேர்முகப்பரீட்சை ஆகியவற்றின் முடிவுகளுக்கமைய பயிலுனர்கள் தெரிவு செய்யப்படுவர்.

மேலும் மாணவர் அனுமதி பற்றிய விபரங்களை முகாமையாளர்–மனிதவளமும் நிர்வாகமும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

கற்கைநெறி கட்டணம்

முழுநேர கற்கைநெறிக்கு எந்தவித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

பகுதிநேர கற்கைநெறி

மேலதிக பயிற்சி செயற்பாடாக பகுதிநேர பயிற்சி திட்டமொன்று நிறுவகத்தின் சாதாரண வேலை நேரத்தின் பின் செயற்படுத்தப்படுகின்றது.

மாணவர்களை இணைத்துக்கொள்ளும் முறைமை
  • வருடாந்தம் மூன்று முறை விண்ணப்பங்கள் கோரப்படும்(பெப்ரவரி, ஜூன், ஒக்டோபர்)
  • கற்கைநெறி ஆரம்பமாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பதாக உள்ளூர் பத்திரிகை மூலமாக விளம்பரப்படுத்தப்படும். தரப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்திற்கேற்ப விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பப்படிவங்களை இ.ஜே.தொ.ப.நி பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம், அல்லது நிறுவக இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
  • நேர்முகப்பரீட்சை மூலம் பயிலுனர்கள் தெரிவு செய்யப்படுவர்.
கற்கைநெறி கட்டணம்

ஒவ்வொரு கற்கைநெறிக்கும் கீழே காட்டப்பட்டுள்ளவாறு மாணவர்களிடமிருந்து கட்டணங்கள் அறவிடப்படும். (கற்கைநெறி கட்டணம் காலத்திற்கு காலம் மாற்றப்படும். தயவுசெய்து சரியான கட்டணத்தை பதிவாளர் அலுவலகத்தில் அறிந்து கொள்ளவும்.)