பாடநெறி விபரங்கள்

டீசல் பொறிவல்லுனர்
வகை முழுநேரம்
கால அளவு 3 வருடங்கள்
தேவைப்பாடுகள்
  • வயது: 16 இற்கும் 22 இற்கும் இடையில்
  • கல்வித்தகமைகள்: கல்விப்பொது தராதர சாதாரணப்பரீட்சையில் ஒரே அமர்வில் தமிழ்மொழி/ சிங்களம், கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மீள்பார்வை

முறையான வேலைத்தள பாதுகாப்பைக்கருத்தில்கொண்டு தன்னியக்க இயந்திரத்தின் வேலைத்தத்துவத்தினையும் அவற்றின் செயற்பாடுகளையும் விசேடமாக டீசல் உட்செலுத்தி பம்பிகளையும், உட்செலுத்தியின் வழங்கத்துலக்கல் பற்றியும் அறிவினையும் வழங்கல்.

குறிக்கோள்

சர்வதேச, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப முற்பாதுகாப்பு பயிற்சிகள், சிறந்த அறிவு என்பவற்றுடன் திறமையான தொழிநுட்பவியலாளர்களை உருவாக்குதல்.

உள்ளடக்கம்
  • அடையாளம் காண்பதில் அறிவு
  • தன்னியக்க இயந்திரத்தின் பகுதிகளின் தத்துவங்களும் செயற்பாடுகளும்
முதல் 06 மாதங்கள்
  • எஞ்ஜினை வேறுபடுத்தலும் பிரித்துப்பார்த்தலும்.
  • பரிசோதித்தல்
  • ஹம் புஷ் பொருத்தல்
  • கிறங் சாப்ற்ம் வெயாரிங்கும் பொருத்தல்
  • ஒயில் கூலரும் ஒயில் பம்பும் பொருத்தல்
  • உருளையின் தலையைப்பொருத்தல்
  • நீர்ப்பம்பும் ஒயில் வடிகட்டும் கருவியினைப்பொருத்தல்
  • கிறாங் சாப்ற்றினையும் முசலத்தினையும் இணைத்தல்.
  • துணைப்பாகங்களைப்பொருத்தி எஞ்ஜினைப் பூர்த்தியாக்கல்
  • டைனோமானியுடன் எஞ்ஜினைப்பரிசோதித்தல்.
அடுத்த 06 மாதங்கள்
  • வேலைத்தளத்திற்கு வெளியே தொழில் நிறுவனப்பயிற்சி
முதல் 06 மாதங்கள்
  • எரிபொருள் உட்புகுத்தி பம்பிகளினதும், உட்செலுத்திகளினதும் எல்லா வகையான பிரித்துப்பார்த்தலும்.
  • பகுதிகளை பரிசோதித்தல்.
  • ஒன்றாக்கி பொருத்துதல்
  • பரிட்சை வாங்கில் பரிசோதித்தல்
  • உட்புகுத்தி வழங்கல்துலக்கல்.
அடுத்த 06 மாதங்கள்

மீட்டலும் இறுதி மதிப்பிடலும்

வகுப்பறைப்பாடம்: வாரத்தில் ஒருதடவை வேலைத்தள விஞ்ஞானம், வேலைத்தள கணித்தல், தொழில்நுட்ப வரைபு ஆகிய மூன்று பாடங்களும் வகுப்பறையில் நடாத்தப்படும். இத்துடன் ஆங்கில வகுப்பும் நடாத்தப்படுகிறது.

கட்டணம் இலவசம்
பின்னால்