பாடநெறி விபரங்கள்

குளிரூட்டி, காற்றுபதனமாக்கல் பொறிவல்லுனர்
வகை முழுநேரம்
கால அளவு 3 ½ வருடங்கள்
தேவைப்பாடுகள்
  • வயது: 16 இற்கும் 22 இற்கும் இடையில்
  • கல்வித்தகமைகள்: கல்விப்பொது தராதர சாதாரணப்பரீட்சையில் ஒரே அமர்வில் தமிழ்மொழி/ சிங்களம், கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மீள்பார்வை

வீட்டு, வர்த்தக, தொழிற்சாலை குளிரூட்டிகளையும் காற்று பதனமாக்கிகளும் அவற்றின் செயற்பாடுகள், பராமரிப்பு, பழுதுகளைச்சரிபார்த்தல் என்பவற்றில் அறிவைப்பெறல்.

குறிக்கோள்

சர்வதேச, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப முற்பாதுகாப்பு பயிற்சிகள், சிறந்த அறிவு என்பவற்றுடன் திறமையான தொழிநுட்பவியலாளர்களை உருவாக்குதல்.

உள்ளடக்கம்
  • வெப்பவியல் தத்துவங்கள்.
  • குளிரூட்டி, காற்றுபதனமாக்கி பற்றிய அடிப்படைகள்.
  • ஆவிநெருக்கல் தொகுதியின் குளிரூட்டிச்சுற்றும் என்தல்பி அட்டவணையும்.
  • Safety and Safety precaution.
  • குழாய் ஒட்டுதலும் வன்பற்றாசு வைத்து இணைத்தலும்.
  • அளவிடுதல் பரிசோதனை (அமுக்கம், வெப்பநிலை, சாரீரப்பதன்)
  • குளிரூட்டிச்சுற்றில் பிரதான பாகங்களும் துணைப்பகுதிகளும்
  • அடிப்படைச்சுற்றும் கட்டுப்பாடுகளும் மின்னோட்டம், மின்னழுத்த வேறுபாடு, தடை என்பவற்றை அளத்தல்.
  • குளிரூட்டித்திரவத்தினை சரிபார்த்தல், மீள்சுற்று, சுற்றாடல் பலன்கள்.
  • எல்லா வகையான வீட்டு, வர்த்தக, தொழிற்சாலை குளிரூட்டிகளையும் காற்று பதனமாக்கிகளையும் நிறுவுதல், பழுதுகளைச் சரிபார்த்தல், பராமரிப்பு, வழங்கல் துலக்கள் என்பவற்றைச் செய்தல்.
  • திருத்த, பராமரிப்பு வேலைகளுக்கு மதிப்பீட்டைத்தயாரித்தல்.

(தொழில் நிறுவனப்பயிற்சி)

  • காற்று/சைக்கோமெற்றிக் அட்டவணைகளின் தன்மைகள்.
  • குளிரூட்டி திரவங்களும் குளிரூட்டி திரவங்களும் ஒயில்களும்.
  • வேறு வகையான குளிரூட்டித்தொகுதிகளின் வகைகள்.
  • புதிய தொழில்நுட்பத்தின் பிரயோகம் (இன்வேட்டர், VRV, VRF)
  • காற்றுபதனமாக்கிகளின் கணித்தல், வெப்பச்சுமை.
  • குளிர் அறைகளின் குளிர்ச்சுமையின் கணிப்பீடு.

மீட்டலும் இறுதி மதிப்பிடலும்

வகுப்பறைப்பாடம்: வாரத்தில் ஒருதடவை வேலைத்தள விஞ்ஞானம், வேலைத்தள கணித்தல், தொழில்நுட்ப வரைபு ஆகிய மூன்று பாடங்களும் வகுப்பறையில் நடாத்தப்படும். இத்துடன் ஆங்கில வகுப்பும் நடாத்தப்படுகிறது.

கட்டணம் இலவசம்
பின்னால்