பாடநெறி விபரங்கள்

காய்ச்சி இணைத்தல் செய்பவர்
வகை முழுநேரம்
கால அளவு 3 வருடங்கள்
தேவைப்பாடுகள்
  • வயது: 16 இற்கும் 22 இற்கும் இடையில்
  • கல்வித்தகமைகள்: கல்விப்பொது தராதர சாதாரணப்பரீட்சையில் ஒரே அமர்வில் தமிழ்மொழி/ சிங்களம், கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மீள்பார்வை

வேலைத்தள பாதுகாப்புடன் காய்ச்சியிணைத்தலின் தத்துவங்களும் அவற்றின் செயற்பாடுகளும் பற்றிய அறிவைப்பெறல்.

குறிக்கோள்

சர்வதேச, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப முற்பாதுகாப்பு பயிற்சிகள், சிறந்த அறிவு என்பவற்றுடன் திறமையான தொழிநுட்பவியலாளர்களை உருவாக்குதல்.

உள்ளடக்கம்
  • பாதுகாப்பு உபகரணங்களின் அறிமுகம்
  • ஒட்சி அசற்றலின் / ஒட்சி எரிபொருள் சுவாலை என்பவற்றினால் உருக்கினை வெட்டுதல்.
  • வில் நீளத்தினை கட்டுப்படுத்துதல்.
  • 1F, 2F, 3F, 4F திறந்த மூலை மூட்டில் (தளம்/கிடை) கையாளான வில் காய்ச்சியிணைத்தல் முறையில் உருக்குத்தகடுகளை ஒட்டுதல்.
  • பல்வேறுபட்ட சுவாலைகளின் விளக்கம்.
  • நிரப்பத்தடிகளின் உருகி வழிதலும் தவறான ஒட்டுதலும்.
  • பிணையல் மூட்டு, மூலை மூட்டு, பின்பகுதி மூட்டு என்பவற்றில் காய்ச்சியிணைத்தல் முறையில் உருக்குத்தகடுகளை ஒட்டுதல்.
  • பற்றாசு வைத்து ஒட்டல், பித்தளையாலொட்டல் செய்தல்.
  • உலோகத்தகட்டு வேலைகள்
  • திட்டத்திற்கு ஏற்ப சில பகுதிகளின் உருவாக்கம்
  • மேற்தள அரைத்தல்
முதல் 06 மாதங்கள்
தொழில்துறை பயிற்சி
  • பிளாஸ்மா வெட்டுதல் முறையினால் உருக்கு வெட்டுதல்.
  • 1G, 2G, 3G, 4G இல் கையால் உலோக வில் காய்ச்சியிணைத்தலினால் உருக்குத்தகடுகளை ஒட்டுதல்.
  • நிலைக்குத்தான,கிடையான நிலைகளில் ஒட்சி அசற்றலின் காய்ச்சியிணைத்தல் முறையினால் உருக்குத்தகடுகளை ஒட்டுதல்.
  • ஒட்சி அசற்றலின் காய்ச்சியிணைத்தல் முறையினால் அலுமினியத்தகடுகளை ஒட்டுதல்.
  • எல்லா நிலைகளிலும் தங்குதன் சடத்துவ வாயு காய்ச்சியிணைத்தல் முறையினால் கறையில் உருக்கு ஒட்டுதல்.
  • எல்லா நிலைகளிலும் தங்குதன் சடத்துவ வாயு காய்ச்சியிணைத்தல் முறையினால் இரும்பு அற்ற உலோகங்களை ஒட்டுதல்.
  • எல்லா நிலைகளிலும் உலோக, ஆகன் வாயு காய்ச்சியிணைத்தல் முறையினால் உருக்குத்தகடுகளை ஒட்டுதல்.
  • எல்லா நிலைகளிலும் உலோக, ஆகன் வாயு காய்ச்சியிணைத்தல் முறையினால் முறையினால் இரும்பு அற்ற உலோகங்களை ஒட்டுதல்.
  • வார்ப்பு இரும்பு ஒட்டுதல்.
அடுத்த 06 மாதங்கள்
நிறுவனம்சார் பயிற்சி

மீட்டலும் இறுதி மதிப்பிடலும்

வகுப்பறைப்பாடம்: வாரத்தில் ஒருதடவை வேலைத்தள விஞ்ஞானம், வேலைத்தள கணித்தல், தொழில்நுட்ப வரைபு ஆகிய மூன்று பாடங்களும் வகுப்பறையில் நடாத்தப்படும். இத்துடன் ஆங்கில வகுப்பும் நடாத்தப்படுகிறது.

கட்டணம் இலவசம்
பின்னால்